சென்னையில் சிக்கியிருந்த 320 பேர் இலங்கை வந்தனர்
இலங்கைப் பயணிகள் 320 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் இன்று இந்தியாவின் சென்னையிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கைக்கு வர முடியாமல் சென்னையில் சிக்கியிருந்த குழுவினரே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1122 எனும் விசேட விமானத்தின் மூலம் அவர்கள் சென்னையிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று பிற்பகல் 12.35 மணிக்கு வந்தடைந்துள்ளனர்.
இவ்விமானப் பயணிகளுடன், கர்ப்பிணிப் பெண்களும் வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த குழுவினர், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கருத்துக்களேதுமில்லை