நிவாரணப் பணிகளுக்கு பதிலாக பிரசார நடவடிக்கைளே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் – அனுர குற்றச்சாட்டு

தேர்தல் பிரசார நடவடிக்கைள் தற்போது ஆரம்பிக்கப்பட்டால் நிவாரணப் பணிகளுக்கு பதிலாக முற்றுமுழுதாக தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின்  தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்தே வருகின்றனர். மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற காரணிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டே வருகின்றது.

பொது நிருவாகமும் முடக்கப்பட்டேயுள்ளது. ஆகவே தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கான எந்தவொரு சூழலும் இல்லாத இந்த நிலையில் விருப்பு எண் வழங்கினால் அதனை எப்படி மக்களுக்கு பிரசாரம் செய்வது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை அரச தரப்பினர் முன்னெடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் இப்போது விருப்பு என் வழங்கப்பட்டால் நிவாரண பணிகளுக்கு பதிலாக முற்று முழுதாக தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும்.

இதனால் அரசாங்கம் மாத்திரே பிரசார செயற்பாடுகளில் ஈடுபடும். எதிரணிக்கு நியாயமான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். இப்போதே பசில் ராஜபக்ஷ தலைமையில் அந்தப்பணி ஆரம்பித்துவிட்டது. ஆகவே இப்போது தேர்தல் நடத்தப்படுமென்றால் தேர்தல் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

அதனை முன்னெடுக்க நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதனை கவனத்தில் கொண்டு தேர்தலை நடத்த முன்வருதல் வேண்டும். எனவே ஆணைக்குழு இந்த விடயங்களை கருத்தில் கொள்ளுங்கள்” என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.