350 இற்கும் மேற்பட்ட மாற்றுவலுவுள்ளோர், முன்னாள் போராளிகளுக்கு (2ம் கட்டம்) தமிழ் சி.என்.என். நிவாரணப் பணி காரைதீவு அம்பாறையில்!
தமிழ் சி.என்.என். குழுமம் யாழ். மற்றும் வன்னி மாவட்டங்களில் பல்வேறு பட்ட உதவித்திட்டங்களை அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியால் பல்வேறு சேவை நோக்குள்ள நல்லுள்ளம் படைத்தவர்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இரண்டாம் கட்ட உலர் உணவு வழங்கும் செயற்றிட்டத்துக்கு மதியுகன் ராமநாதன் அவர்களின் நிதி அனுசரணையுடன் வழங்கி வைக்கப்பட்டது.
https://www.facebook.com/100010809667320/videos/1090473711322941/
இதன் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் தமிழ் சி.என்.என். இன் ஆசிரிய பீட குழுமத்தினரிடம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மாற்றுவலுவுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த உலர் உணவு வழங்கும் திட்டம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு பிரதேசத்தில் கொடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மாற்றுவலுவுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் , மாவீரர் குடும்பங்கள் என 350 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுகள் வழங்கும் பணி இ.டம்பெற உள்ளது.
தமிழ் சி.என்.என். குழுமத்தினருடன் இணைந்து எம் உறவுகளுக்கு சேவை மேற்கொள்ள விரும்பும் கருணை உள்ளங்கொண்டோர், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கனடாவில் உள்ள நல்லுள்ளம் படைத்தோர் இந்தப் பயணத்தில் இணைந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு: Viber 0778630268
Email: ahitamilcnn@gmail.com
கருத்துக்களேதுமில்லை