வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி: மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன்

வவுனியாநிருபர்்

2020ம் ஆண்டிற்கான சிறுபோகச்செய்கை விதை மானியம் வழங்கல் திட்டத்திற்கு வவுனியா மாவட்ட விவசாயிகளை எதிர்வரும் 20.05.2020ம் திகதிக்கு முன்னாராக விண்ணப்பிக்குமாறு வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார்.

சிறுபோகச்செய்கை விதை மானியம் வழங்கல் திட்டம் வழங்கல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சோளம் , எள்ளு , நிலக்கடலை , குரக்கன் , பெரிய வெங்காயம் , சின்ன வெங்காயம் , மிளகாய் , உருளைக்கிழங்கு , மஞ்சள் , இஞ்சி , வெள்ளைப்பூடு ஆகிய 16வகையிலான பயிர்களுக்கு அரசாங்கத்தினால் மானியம் வழங்கப்படவுள்ளமையினால் விவசாயிகளை உடனடியாக தங்களது பகுதி விவசாயப் போதனாசிரியரிடம் பதிவுகளை மேற்கொள்ளவும்.

மேலும் இம்மாதம் 20ம் திகதி பதிவுகளை மேற்கொள்வதற்கு இறுதித்திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளமையினால் அதற்கு முன்னர் பதிவுகளை மேற்கொண்டு அரசாங்கத்தின் விதை மானியம் வழங்கும் திட்டத்தின் இணைந்து பயன் பெறவும்

மேலதிக விபரங்களுக்கு 024 – 2222 324 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தவும் அல்லது புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் காரியாலயத்தினை தொடர்பு கொள்ளவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.