கடலில் பாய்ந்து தப்பிக்க முயற்சித்த போதை மாத்திரை விற்பனை செய்துவந்த இளைஞன் யாழில் கைது

யாழ். தீவக பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்துவந்த இளைஞன் பொலிஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக கடலில் பாய்ந்த நிலையில், கடற்படையினர் அவரை மீட்டு கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் யாழ். மண்டைதீவுச் சந்திக்கு அண்மையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றது.

வேலணை சாட்டி கடற்கரை பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞனே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் வேலணைப் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்குவதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அவரைக் கைது செய்ய பொலிஸார் முயற்சித்துள்ளனர். இதன்போது பொலிஸ் அலுவலகரிடமிருந்து தப்பித்த இளைஞன், பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து நீந்திச் சென்று தப்பிக்க முயற்சித்துள்ளார்.

அதனையடுத்து மண்டைதீவு கடற்படை காவலரணைச் சேர்ந்த கடற்படையினர் இளைஞனை மீட்டுள்ளனர். இதனையடுத்து அவரைக் கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.