களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் கிழக்குப் பக்கமாக அமைந்துள்ள கிணறு பொங்கி வழிந்த அற்புதம் இன்று (புதன்கிழமை) அதிகாலை நிகழ்ந்துள்ளதாக ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ மு.அங்குசசர்மா தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.அங்குசசர்மா ஆலய நிருவாகத்தினரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் ஆலயத்திற்கு விரைந்து கிணற்றைப் பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில், அவ்விடத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து ஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் மக்களைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
அத்தோடு களுவாஞ்சிகுடிப் பகுதி பொதுச் சுகாதார உத்தியோகஸ்தரும் குறித்த இடத்திற்கு விரைந்து நிலமையினைப் பார்வையிட்டதுடன், இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் ஆய்வுப் பிரிவுக்கும் அறிவிப்பதாகத் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை