முள்ளிவாய்க்கால் நினைவுகூரலில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை
முள்ளிவாய்க்கால் நினைவுகூரலில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ கூறியுள்ளார்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது.
இதன்படி இந்த ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்று (புதன்கிழமை) காலை யாழ்.செம்மணி பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நிகழ்வை நிறுத்தியுள்ளதுடன். அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு பணித்துள்ளனர். எனினும் சமூக இடைவெளியை பேணி நினைவுகூரல் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் விபரங்கள் பொலிஸாரால் திரட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அவர்களை தனிமைப்படுத்தவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை