முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதச் செயற்பாடுகள் – அருவருக்கத்தக்கவை என்கிறார் சஜித்

எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகப் பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாதச் செயற்பாடுகள் அருவருக்கத்தக்கவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எமது சமூகத்தில் தொடக்க நிலையிலுள்ள இனவாதமானது எமது தாய் நாட்டின் மக்களுக்கு மத்தியில் இன, மத, சமூகப் பிரிவினைகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இது எமது தேசிய நலனுக்கு எதிரானதும், அதற்கு குந்தகம் விளைவிப்பதும் ஆகும். மனிதத் தன்மைக்கும், உயர் மனித விழுமியங்களுக்கும்கூட அது எதிரானது.

எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாதச் செயற்பாடுகள் அருவருக்கத்தக்கவை  நம் அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டியவை.

இத்தகைய வெறுக்கத்தக்க செயற்பாடுகள் கௌதம புத்தரின் உன்னத போதனைகளுக்கும் முரணானவை ஆகும்.

ஆசிர்வதிக்கப்பட்ட அந்தப் போதனைகளுக்கு தவறான அர்த்தம் கற்பிப்பதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் அவற்றுக்கு எதிரான குற்றமாகவும் தேசத்துரோகமாகவுமே அமையும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.