இலங்கையர்களை அழைத்துவர மாலைதீவு நோக்கி பயணித்தது விசேட விமானம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கு விசேட விமானமொன்று பயணித்துள்ளது.

அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் 288 பேரை அழைத்து வருவதற்காகவே குறித்த விமானம் இவ்வாறு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கல்விக்காகவும் தொழிலுக்காகவும் வெளிநாடுகளுக்குச் சென்ற பலர் நாடு திரும்ப முடியாது தவித்து வருகின்றனர்.

இதனையடுத்து ஒவ்வொரு நாடுகளும் தத்தமது பிரஜைகளை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கமைய இலங்கை அரசாங்கமும் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கை பிரஜைகளை கட்டம் கட்டமாக நாட்டிற்கு அழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.