நீருக்கான கட்டணத்தினை தவணை அடிப்படையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம்!
நீர்ப்பட்டியலுக்கான கட்டணத்தை ஒரே தடவையில் செலுத்தமுடியாத பாவனையாளர்களுக்கு தவணை அடிப்படையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
பாவனைக்கு மேலதிகமாக நீர்க்கட்டணம் பட்டியலிடப்பட்டிருப்பின் அது தொடர்பாக மக்கள் தெரிவிக்க முடியுமென அவர் கூறியுள்ளார்.
எனவே, மக்களின் கோரிக்கைக்கு அமைய நீர்க்கட்டணங்கள் மீள்பரிசீலனை செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை