மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை – இன்று முதல் விசேட நடவடிக்கை!
மதுபானசாலைகளுக்கு முன்பாக அநாவசியமாக ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று(வியாழக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுபானசாலைகளுக்கு முன்பாக அதிகமானோர் ஒன்றுக்கூடியிருந்தனர்.
அத்துடன், சமூக இடைவெளியை மறந்து மக்கள் செயற்பட்டுள்ளனர் எனவும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இதனையடுத்து, அவதானத்துடன் செயற்படாவிட்டால் திறக்கப்பட்ட மதுபானசாலைகளை மீண்டும் மூட வேண்டி ஏற்படுமென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை