தந்தை செல்வா இறக்கும்போது சமஷ்டிக்கொள்கையுடன் இறக்கவில்லை: பா.அரியநேத்திரன்.மு.பா.உ.

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி இன்று 44,(2020,மே,14)  ஆண்டுகள் தந்தைசெல்வா இலங்கை தமிழரசு கட்சியை 1949 டிசம்பர்18,ல் சமஷ்டிக்கொள்கையுடன் ஆரம்பித்து அதற்காக பல போராட்டங்களை நடத்தியபோதும் அவர் இறக்கும் போது சமஷ்டிக்கொள்கையுடன் இறக்கவில்லை தமீழீழ கொள்கையுடனேயே இறந்தார் என தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன்.
வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி கடந்த 1976,மே,14,ம் நாள் அதன் 44, வயது இன்று ஆகும் அது தொடர்பாக மேலும் கூறுகையில்.
இலங்கை தமிழரசுகட்சியை நிறுவிய தந்தை செல்வா அவர்கள் 1949 தொடக்கம் 1976  அதாவது 27, வருடங்களாக சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்கள் பெறவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில்தான் பல்வேறு போராட்டங்கள் ஒப்பந்தங்கள் எல்லாம் செய்தார்.
இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்த ஐக்கிய தேசிய கட்சியும்,ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஆட்சிசெய்த காலமெல்லாம் தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரலாற்றை நன்கு உணர்ந்து தெளிந்த நிலையிலையே இனி சமஷ்டிக்கொள்கை சரிப்பட்டுவராது என்ற நோக்கோடு வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்னது.
அந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தெளிவாக குறிப்பிட்ட விடயம் ‘இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளும்; வரை பல

நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித்தமிழ் தேசிய இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.

அரசொன்றைத் தாபிப்பதற்கான அதன் ஈடுபாட்டுக்கடப்பாடு தொடர்பில், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே வாழ்கின்றவர்களும் வேலை செய்கின்றவர்களுமான பெரும்பான்மையான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளிப்படுத்திய அதன் ஒவ்வாமைகளைக் கருத்தில் கொள்கின்ற அதேவேளையில், ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமை பொருந்திய, சமயச் சார்பற்ற, சமதர்மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகி உள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

ஆனால் தந்தை செல்வா வட்டுக்கோட்டையில் எடுத்த தீர்மானத்திற்கு வடக்கு கிழக்கு  மக்களின ஆணையை 1977,யூண்,24ல் இடம்பெற்ற பொதுத்தேர்தல் பார்பதற்கு முன்னமே 1977,ஏப்ரல்,26ல் தந்தை செல்வா இயற்கை எய்திவிட்டார்.

தந்தைசெல்வா இறக்கும்போது சமஷ்டிக்கனவுடன் இறக்கவில்லை, தமிழீழக்கனவுடனே இறந்தார் என்பதே உண்மை அதுவே வரலாறு.
வட்டுக்கோட்டை தீர்மானத்தை அடைவதற்காகவே ஈழவிடுதலை இயக்கங்கள் சுமார் 36, ஆரம்பிக்கப்பட்டு ஆயதப்போராட்டங்களை மேற்கொண்டன இருந்தபோதும் 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய 35, இயக்கங்களும் செயல் இழந்தன அல்லது இல்லாமல் போயின அல்லது விடுதலைப்புலிகளால் தடைசெய்யப்பட்டன. அதில் ஓரிரு இயக்கங்கள் இலங்கை அரசில் அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டு அரசியல் நீரோட்டத்தில் இணைந்தன இதுதான் வரலாறு.
எனவே 1977,ஏப்ரல்,26, தந்தை செல்வா மரணிக்கும்போதும், 2009,மே,18, தலைவர் பிரபாகரன் மௌனிக்கும் போதும் இரண்டு தலைவர்களும் தமிழீழ கனவுடனேயே இருந்தனர் என்பது மறைக்கமுடியாத உண்மை.
இந்த இரண்டு தலைவர்களும் எம்மத்தியில் தற்பொது இல்லாமல் இருந்தாலும் தற்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு்தலைவர் சம்பந்தன் ஐயா தலைமையில் இராஜதந்திர அரசியல் செயல்பாடு ஜனநாயக வழிமுறையில் முன்எடுக்கப்படுகிறது.
இந்த ஜனநாயரீதியான செயல்பாடுகள் வெற்றிபெறவேண்டுமானால் தமிழ்தேசிய கூட்டமைப்பை தொடர்ந்தும் வடக்கு கிழக்கு மக்கள் பலப்படுத்துவது அவர்களின் தாரமீக கடமை எனவும் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.