மங்கள சமரவீர CIDயில் முன்னிலை
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தவர்களை வாக்களிப்பில் ஈடுபடுத்த மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை