கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கு புதிய நெடுஞ்சாலை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கான புதிய நெடுஞ்சாலையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று(வியாழக்கிழமை) 9 மணியளவில் குறித்த நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்ரசிறி மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் குணவர்தன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் இந்த கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டவர்கள் நெடுஞ்சாலை அமைக்கப்பட வேண்டிதன் அவசியம் தொடர்பில் ஆலோசனை வழங்கியதாகவும் அதன் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்ரசிறி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.