மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டண பட்டியல்களை தனித்தனியாக வழங்குமாறு உத்தரவு

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டண பட்டியல்களை தனித்தனியாக வழங்குமாறு மின்சாரசபை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்சாரசபை அதிகாரிகளுக்கும்  மின்சாரம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது, இரண்டு மாதங்களுக்கான மின்சார கட்டணங்களை ஒரே பட்டியலில் வழங்குவதால் மின்கட்டணத்தில் அதிகரிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மின்சார கட்டணத்தை வழங்க ஒரு மாதகால அவகாசம் வழங்குவதென்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.