கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 63 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அதற்கமைய கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 445 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பிய 63 பேரில் 59 பேர் கடற்படையினர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அதற்கமைய பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 121 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 915ஆக பதிவாகியுள்ளது.

இவர்களில் 461 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 09 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்