மேல் மாகாண தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரத்திற்கான காலம் நீடிப்பு
மேல் மாகாண தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரத்திற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதி வரை குறித்த காலம் நீடிக்கப்பட்டுள்ளதோடு, அதற்காக எந்தவொரு வரியும் அறவிடப்படாது எனவும் மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த தனியார் பேருந்து வீதிகளுக்கான அனுமதிப்பத்திரத்திற்கான கால எல்லை மார்ச் மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை