நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு- அனந்தி சந்தேகம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகாளானது அவர்கள் ஓர் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாக வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக யாழில் நேற்று (புதன்கிழமை) மாலை செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “உண்மையில் இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகின்றதாக இருக்கின்றது.

ஆரம்பத்தில் பிரதமருடைய கூட்டத்திற்கு செல்லமாட்டோம் என்று சொன்னவர்கள் இரண்டாவது கூட்டத்தில் கலந்ததுகொண்டவர்கள் பிரதமரிடம் ஒரு கோவையைக் கையளிப்பதைப் பார்த்தோம்.

கூட்டத்தில், தமிழ் அரசியல் கைதிகள், இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறுகின்றார்கள்.

அதங்குப் பின்னர் சுமந்திரன், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் விடுதலைப் புலிகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை, விடுதலைப் போராட்டத்தையும்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயதம் தூக்கியதையும் ஏற்றுக்கொள்ளவில்லையென்று விமர்சனமாக அவர் பேசியிருக்கிறார்.

ஆனால், அதற்குப் பிறகு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் இவ்வாமல் சமந்திரன் பிரதமர் மஹிந்தவை தனியாக சந்தித்துள்ளார்.

எனவே, இவையெல்லாம் கூட்டமைப்பினர் ஒரு நிகழ்ச்சிநிரலின் கீழ் செயற்படுகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது” என அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்