கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை
பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட குறித்த கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள், இலங்கை துறைமுக அதிகாரசபை வளாகம் மற்றும் கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்தில் உள்ள தனியார் இடம் என்பனவற்றில் தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் நீதி மையம் முன்வைத்த மனுவிற்கு அமைய, குறித்த கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கமைய மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் மீள் ஏற்றுமதிகான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை