ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டு – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதன்போது 245 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து கடந்த 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் நாடு முழுவதும் 53,547 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு இந்த காலகட்டத்தில் 14,333 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை