மே 17ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்!

கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடரும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு காலை 5 மணிக்கு தளர்த்தப்படும். பின்னர் 17 ஆம் திகதி ஞாயிறு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா தவிர இதர அனைத்து மாவட்டங்களிலும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு 23ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகி காலை 5 மணிக்குத் தளரும்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இயல்பு நிலையை ஏற்படுத்த முன்னர் விடுத்த அறிவிப்பு அப்படியே இருக்கும். ஊரடங்கு அமுலில் இருந்தாலும் அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் நடக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.