925 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு நேற்றிரவு அறிவித்துள்ளது.
அதேவேளை, தொற்றுக்குள்ளான 63 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதையடுத்துத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 445 ஆக உயர்ந்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 925 பேரில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 471 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே மேலும் 108 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்
கருத்துக்களேதுமில்லை