தேர்தல் மனுக்களை விசாரிக்க முழுமையான ஆயம் நியமிப்பு!
ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிப்பதற்கு ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் பிரதம நீதியரசரால் 5 நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாமா என்பதை அவர்கள் பரிசீலிப்பார்கள்.
பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரியா (தலைவர்), விஜித் மலல்கொட, புவனேக அலுவிஹார, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன ஆகியோர் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த வழக்குத் தவணையின் போது முழுமையான ஆயம் நியமிக்கப்பட வேண்டும் என்று மனுதாரர் தரப்பு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை