சிகிச்சை முடிந்து வந்த அரியாலைவாசிகளுக்கு கொரோனா தொற்று -மருத்துவர் சத்தியமூர்த்தி தகவல்
சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டு கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை முடிந்து திரும்பிய அரியாலை வாசிகளிடம் கொரோனா தொற்று சிறிதளவு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இது தொடர்பில் தகவல் வெளியிடுகையில்,
இன்றையதினம் 27 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 6 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் அரியாலை பகுதியை சேர்ந்தவர்கள். கடந்த மாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று இரண்டு கிழமைக்கு முன்னர் வீடு திரும்பியவர்கள். இன்றைய பரிசோதனையில் இவர்களில் ஐவருக்கு வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் சிறிதளவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே இவர்கள் ஐவரும் தொடர்ந்தும் இரண்டு கிழமை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். அத்துடன் இரண்டு கிழமையின் பின்னர் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் அறிய தந்துள்ளனர். ஒருவருக்கு மீள பரிசோதனை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை