புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு சம்பந்தன் அளித்த உறுதிமொழி
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போகலே தனது சான்றுகளை நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்விடம் கையளித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடைமைகளை பொறுப்பேற்றார்.

கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்ட உயர்ஸ்தானிகர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இரண்டு நாடுகளும் பல காலங்களாக இணைந்து செயற்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என இரா. சம்பந்தன் உயர்ஸ்தானிகருக்கு உறுதியளித்தார்.












கருத்துக்களேதுமில்லை