வவுனியாவில் சுகாதார நடைமுறைகள் கண்காணிப்புக்கு ஐந்து குழுக்கள் உருவாக்கம்!

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் வவுனியாவின் சுகாதார முன்னேற்ற நிலைமை தொடர்பான கலந்துரையாடல் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அலுவலக்தில் இடம்பெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் சு.மகேந்திரன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில், இராணுவத்தினர், பொலிஸார், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பரிசோதகர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சரியான முறையில் கடைப்பிடிக்கின்றார்களா என்பதனை கண்காணிக்கும் செயற்பாடொன்றை முன்னெடுப்பதாக தீர்மானிக்கபட்டுள்ளதுடன் அதற்காக 5 குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

குறித்த, குழுவினர் இன்று வவுனியாவில் அமைந்துள்ள வியாபார நிலையங்களிற்கு நேரடியாக விஐயம்செய்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்துதுடன் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வியாபார நிலையங்களிற்கு அறிவுறுத்தல்களையும் வழங்கியிருந்தனர்.  குறித்த செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.