வவுனியாவில்  சிறிரெலோ கிறிஸ்ரி குகராஜாவின் 21வது ஆண்டு நினைவஞ்சலி உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு…

கடந்த 1999 ம் ஆண்டு துரோகத்தனமாக சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் இராணுவ தளபதியுமான கிறிஸ்ரி குகராஜா (குகன்) அவர்களின் 21வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை இன்று (15.05.2020) காலை 7.30 மணியளவில் குகன் அவர்களின் திருவுருவ படமிருக்கும் வவுனியா வைரவர்முளியங்குளத்தில் சிறிரெலோ கட்சியினரால் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது

இவ் அஞ்சலி நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த தளபதிகள் , சிரேஷ்ட உறுப்பினர்கள், சிறிரெலோ கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள்,இளைஞரணியினர், பிரதேச சபை உறுப்பினர்கள், குகன் அவர்களின் உறவினர்கள்,குகன் அவர்களின் நண்பர்களான யங்ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் தலைவர் ஜீவன், மற்றும் கழகத்தை சேர்ந்த பாபு, குகன் அவர்களின் நண்பரும் தமிழ்விருட்சத்தின் தலைவருமான சந்திரகுமார் கண்ணன்,செயலாளர் ஜெகன், ஆகியோருடன் முச்சக்கர வண்டி , முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் கோனேஸ்வரன், கண்ணகி தேவராஜா ஆகியோரும் கலந்து கொண்டு அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.