சிகை அலங்கார நிலையங்களில் அதிரடி பரிசோதனை கடை உரிமையாளர்களுக்கும் விசேட ஆலோசனைகள்!
ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட சிகை அலங்கார நிலையங்கள் செயற்படுகின்றனவா என கண்டறியும் நோக்குடன் இன்று (15) சுகாதார பரிசோதகர்களால் விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சிகை அலங்கார உரிமையாளர்களுடனான கடந்த 2020.04.20 ஆம் திகதிய கலந்துரையாடலின் போது சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எஸ்.ஐ.எம் கபீரின் வழி காட்டலின் கீழ் சுகாதார மேற்பார்வைப் பரிசோதகர் ஐ.எல். றாஸிக் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சீ.பீ.எம். ஹனீபா,எம். இலங்கோவன், எம்.ஐ.எம். ஹனிபாஉள்ளிட்ட சுகாதார பரிசோதகர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இதன்போது சம்மாந்துறையில் அமைந்துள்ள அனைத்து சிகை அலங்கார நிலையங்களில் கோரோனா மற்றும் பொதுச் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள்,விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்பில் சிகை அலங்கார உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு. சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத சிகை அலங்கார நிலையங்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை