துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞனை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்!
யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்குச் சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பார்வையிட்டார்.
குறித்த துப்பாக்கிச் சூடு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற நிலையில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் காயமடைந்துள்ளார்.
“மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த படைச் சிப்பாய் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். அவரது கையில் கல்லடிப்பட்டு காயமடைந்துள்ளார். இதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்தவேளை, இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது இராணுவத்தினர் மறித்தனர். எனினும் அதனை மீறிச் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது” என இராணுவத்தினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை