வன்னியில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 180 பேர் விடுவிப்பு!

கிளிநொச்சி, முழங்காவில் இராணுவப் பயிற்சி முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட 60 பேர் இன்று சொந்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் விசேட பேருந்துகளில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர்.

கொழும்பில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக அழைத்துவரப்பட்டு கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் உள்ள இராணுவ பயிற்சி முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட இவர்கள் பரிசோதனை முடிந்து சொந்த இடங்களிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை கடற்படையின் வன்னி கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 180 பேர் இன்று தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.