சலூன்கடைகள் திறப்பதற்கான அனுமதிப் பத்திரம் தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரியினால் இடம்பெற்றது …
பல நாட்களாக திறக்கப் படாமல் இருந்த சலூன் கடைகளை மீண்டும் திறப்பதற்காக மற்றும் அதன் உரிமையாளர்களு கடைகளை திறப்பதற்கான அனுமதி பத்திரம் தொடர்பாக காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியினால் சலூன் உரிமையாளர்களின் கடைகள் திறப்பது தொடர்பாக கலந்துரையாடல் 15/05/2020 இன்று காலை 11.00 மணியளவில் சுகாதார வைத்திய நிலையத்தில் இடம் பெற்றது.
இதன் பொது சுகாதார வைத்திய அதிகாரி கருத்து தெரிவிக்கையில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் படி சலூன் உரிமையாளர்கள் நடந்து கொள்ளவேண்டும்.
மேலும் கடைகளுக்கு முன்னாள் கைகளை கழுவுதல்,ஒருவருக்கு ஒரு துணியினை மட்டும் பயன்படுத்தவேண்டும்,பயன்படுத்தும் பொருட்களை ஒருவருக்கு பயன்படுத்திய பின்பு அதனை தொற்று நிக்கியினால் கழுவவேண்டும்,கடைகளுக்கு உள்ளே சமூக இடைவெளி,பத்திரிகைகள்,தொலைக்காட்சி ஆகியவை பயன்படுத்தக்கூடாது மேலும் கடைகளுக்கு வருபவர்களை முழு விபரங்களும் ஒவ்வொரு நாட்களும் பதிவு செய்யவேண்டும்,கழிவுகளை உரிய முறையில் அகற்றவேண்டும் மேலும் பல அறிவுறுத்தல்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது இவ்வாறு காணப்படுகின்ற கடைகளுக்கு சுகாதார வைத்திய பரிசோதகர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான அனுமதிகள் வழங்கப்படும் என்று காரைதீவு வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை