திருமணம் செய்ய உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஜே.எப்.காமிலா பேகம்-எதிர்வரும் நாட்களில் திருமணம் செய்யவுள்ளவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

ஆனால் மிகுந்த கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திருமண மண்டபம் அல்லது திருமணம் செய்கின்ற தலங்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்துகொள்ள அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதுகுறித்த சட்டதிட்டங்களை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் டாக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.