வவுனியா விபத்தில் இருவர் படுகாயம்!
வவுனியா, ரயில் நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குருமன்காடு பகுதியில் இருந்து ரயில் நிலைய வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்துகொண்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை