வவுனியாவில் முதியோர் கொடுப்பனவில் மோசடி குற்றச்சாட்டு: கிராம அலுவலர் மீது விசாரணை…

வவுனியாவில் முதியோர் கொடுப்பனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்து குறித்த கிராம அலுவலர் எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வவுனியா, கோவில்குளம் பகுதியில் முதியோர் கொடுப்பனவின் போது முதியவர் ஒருவருக்கு கொடுப்பனவு வழங்கப்படாது அவரது பெயரில் வந்த கொடுப்பனவை கிராம அலுவலர் பெற்றுக் கொண்டதாக பாதிக்கப்பட்டவரின் மகனால் நாளைய தேசம் மக்கள் குறைகேள் அமைப்பின் ஊடாக மாவட்ட அரச அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த பணத்தை கேட்ட போது கிராம அலுவலர் அதனை இராணுவத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்ததாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக நாளைய தேசம் மக்கள் குறைகேள் அமைப்பினர் தெரிவித்துள்ளதுடன், மாவட்ட செயலகத்தினரும் வாக்கு மூலங்களைப் பெற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.