5000 ரூபா கொடுப்பனவு மலையக இளைஞர்களுக்கு நிரந்தர தீர்வாகாது அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் வைத்தியர் கே.ஆர் கிசான் தெரிவிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று மலையக பகுதிகளை நோக்கி பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருகை தந்துள்ளனர் இதில் பெரும் பாலானோர் இளைஞர் யுவதிகள் தற்போது இவர்களுக்கு அரசாங்கம் 5000 ரூபாவினை கொடுப்பனவாக வழங்கி வருகிறது.இதனை மாதம் அரசாங்கத்திற்கு வழங்கவும் முடியாது. இன்றுள்ள சூழ் நிலையில் இந்த கொரோனா அச்சுறுத்தல் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று கூற முடியாது. ஆகவே இது நிரந்தர தீர்வாகாது என்பது எமது நிலைப்பாடு. ஆகவே, கௌரவ ஜனாதிபதி அவர்கள் இவர்கள் இந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் மலையக பகுதியில் தொழில் பேட்டைகளை ஆரம்பிக்க வேண்டும் என அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும் வைத்தியருமான கே.ஆர் கிசான் தெரிவித்தன் இன்று (15) ஹட்டனில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
இன்று மலையகத்தில் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது.தற்போது கொழும்பில் வேலை செய்தவர்களும் இங்கு வந்துள்ளதனால் இவர்களின் நிலை மேலும் மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே கௌரவ ஜனாதிபதி அவர்கள் இங்கு தொழில் பேட்டைகளை அல்லது கைதொழில்களை ஆரம்பிப்பதற்கு வழிவகைகளை செய்ய வேண்டும் அதே நேரம் இன்று தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது. ஆனால் இன்று கொரோனா காரணமாக வியாபாரிகள்,தொழிலாளர்கள்,நாளாந்த கூலி வேலையில் ஈடுபடுபவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே தேர்தலை நடத்துவதற்கு முன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது வழி செய்ய வேண்டும்.இன்று மலையக பகுதியில் உள்ள பல தொழில் பேட்டைகள் மூடி கிடக்கின்றன.அவற்றினை கம்பனிகளுடன் இணைந்தோ அல்லது தனியார் துறையினருடன் இணைந்தோ தொழில் பேட்டைகளை ஆரம்பித்தால் அதில் இவர்கள் வேலை வாய்ப்புக்களை பெற கூடியதாக இருக்கும் அத்தோடு அது எதிர்காலத்தில் ஏற்பட போகும் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வாக அமையும் அத்தோடு ஊரடங்கு சட்டத்தினை தொடர்ந்து அமுல் படுத்துவதன் காரணமாக எமது நாட்டின் பொருனாதாரம் பாதிப்புக்குள்ளாகின்றன.
இந்த ஊரடங்கு சட்டத்தினை நீக்கி மாற்று வழிகளை அதாவது இரானுவம் சுகாதார தறையினர் மற்றும் தொண்டர்களை கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தால் அது எமது பொருளாதாரத்தினை இந்த அளவு பாதிக்காது. அதே இன்று ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தியதில் கோவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாக தெரியவில்லை.நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன. எனவே இதற்கு மாற்று நடவடிக்கைகளை அமுல் படுத்துமாறு கொருகிறோம் அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.