யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அபாயம் மிகமிகக் குறைவே! – வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மக்கள் பதற்றமடையத் தேவையில்லை.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா எதிர்ப்பில் உடல் உள ஆரோக்கியம் முக்கியமானது மக்கள் பதற்றமடையக் கூடாது. கொரோனா தொற்றுத் தொடர்பான தகவல்கள் வெளியிடும்போது சம்பந்தப்பட்ட தரப்பினரது அவர்களது உறவினர்களது மனநிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அபாயம் மிகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. சமூகத் தொற்றும் இல்லை. இங்கு இடம்பெற்று வருகின்ற பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்