யாழ்ப்பாணம் பல்கலையில் நேற்று இரண்டாவது நாளாக நினைவேந்தல்..!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் மற்றும் குமுதினி படுகொலை நினைவு தினமும் நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீடத்தில் இடம்பெற்றது.

யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலியில் அமைந்துள்ள முகாமைத்துவ பீடத்தின் முன்பாக இரவு 7 மணியளவில் நடைபெற்றது.

இதன்போது குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாகவும் , முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை மாலை 6 மணி முதல் பல்கலைகழக பிரதான வாயிலில் கோப்பாய் பொலிஸார் சுமார் 20 பேர் வரையில் துப்பாக்கிகளுடன்நின்றிருந்தனர்.

நேற்றையதினம் மாணவர்களின் அஞ்சலியை குழப்பும் நோக்குடன் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண பொலிஸார், பல்கலைகழக மாணவர்கள் நுழையும் வாயிலில் ஒரு மணி நேரம் காவல் இருந்த போது , மாணவர்கள் பிரதான வாயிலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அஞ்சலி நிகழ்வு முடிவடைந்த பின்னரே சுடரேற்றியதை அறிந்து அவ்விடத்திற்கு பொலிஸார் விரைந்து அஞ்சலி செலுத்தியவர்களின் விபரங்களை சேகரித்ததுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.