கொட்டகலை நகரில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!

(க.கிஷாந்தன்)

 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபடுமாறு கொட்டகலை நகரிலுள்ள வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை நகரில் எஸ்.சௌந்தராகவன் தலைமையில் பொது சுகாதார அதிகாரிகள் இன்று (16.05.2020) திடீர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இறைச்சி கடைகள், மரக்கறி கடைகள், பழக்கடைகள், மதுபானசாலைகள், ஹோட்டல்கள் உட்பட மக்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக வரும் வியாபார நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது மாட்டிறைச்சி கடையொன்றில் பழுதடைந்த நிலையில் இருந்த 30 கிலோ மாட்டிறைச்சி அவ்விடத்தில் வைத்தே அழிக்கப்பட்டது. கடை உரிமையாளருக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது என பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தராகவன்  தெரிவித்தார்.

முகக்கவசம் மற்றும் கைகவசம் அணிதல், சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை வியாபார நிலையங்களில் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது. பின்பற்றாதவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.