முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்: யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் தொடர்பாக யாழ். மாவட்ட சர்வ மதப் பேரவை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில், “எமது நாட்டில் 11 ஆண்டுகளுக்கு முன்பதாக ஒரு மரண அவலம் நடந்தேறியது. அதனை ஒவ்வொரு ஆண்டும் உணர்வு பூர்வமாக நினைவுகூர்ந்து வருவதுண்டு.

இவ்வாண்டு கொரோனா சூழ்நிலை காரணமாக எமது அஞ்சலிகளை வீடுகளில் இருந்து நிறைவேற்ற அழைக்கப்படுகின்றீர்கள்.

மதத் தலைவர்களாக, மத விழுமியங்களை கருத்திற்கொண்டு வணக்கஸ்தலங்களில் வரும் 18 ஆம் திகதி மாலை 6.15 மணிமுதல் 6.18 மணி வரை மணிகளை ஒலிக்கச் செய்து தொடர்ந்து விளக்கேற்றி விசேட பூசை வழிபாடுகளைச் செய்யுமாறு யாழ். மாவட்ட சர்வ மதப் பேரவையின் மதத் தலைவர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.