கடும் காற்றுடன் கூடிய அடைமழை- வீடு முழுமையாக சேதம்

கடும் காற்றுடன் கூடிய அடைமழையால் நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொட்டகலை, மேபீல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளது.

இந்த அனர்த்தம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிராந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர்.

வீட்டின் கூரைகள் காற்றில் முழுமையாக அள்ளுண்டு சென்றுள்ளன. முன்பகுதி சுவரும் இடிந்து வீழ்ந்துள்ளது. எனினும், வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இவ்வீட்டில் வசித்த தாய் மற்றும் மகன்மார் மூவரும் அயலவர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான வசதிகளை தோட்ட நிர்வாகத்தினரும், கிராம சேவகரும் செய்து கொடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.