ஐ.நா.வின் பயங்கரவாத தடைக்குழு தயாரிக்கும் வழிகாட்டி: இலங்கை உட்பட சார்க் நாடுகள் உள்ளடக்கம்

இலங்கை உள்ளிட்ட சார்க் அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கிய ஒரு வழிகாட்டியை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பயங்கரவாதத் தடைக்குழு தயாரித்து வருகிறது.

அதில், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, உரிய சட்ட திட்டங்களுக்கு அமைவாகவுமே இடம்பெறுவதை உறுதிசெய்யும் வகையில் தயாரிக்கப்படுகிறது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சுதந்திரம், நியாயத்துவம் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த அறிவு என்பன முறையானதொரு நீதித்துறைக்கு, குறிப்பாக தீவிரவாதம் சார்ந்த வழக்குகளில் மிகவும் அவசியமானவையாகும். எனினும் பல நாடுகள் இவ்விடயத்தில் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

இச்சவால்களுக்குத் தீர்வினை வழங்கும் விதமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத் தடைக்குழு சார்க் நாடுகளில் பணியாற்றும் நீதிபதிகளின் பங்களிப்புடன், ‘நீதிபதிகளிக்கான தெற்காசியப் பிராந்திய வழிகாட்டிகளை’ தயாரித்திருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஜோன் ரொஹ்டே, “தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, உரிய சட்ட திட்டங்களுக்கு அமைவாகவுமே இடம்பெற வேண்டும். இக்காரணங்களுக்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினால் வழிகாட்டிகள் தயாரிக்கப்படும் திட்டத்தை ஆதரிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.