இலங்கையில் கொரோனா 957 – நேற்று 22 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்றிரவு தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 957 பேரில் தற்போது 428 நோயாளிகள் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 520 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இதுவரை 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் 106 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்