சீனாவைக் கைவிட்டுச் செல்லும் முதலீடுகளை ஈர்க்குமாறு சஜித் வலியுறுத்து
சீனாவைக் கைவிட்டுச் செல்லும் முதலீடுகளை ஈர்க்குமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தோனேசிய அரசாங்கம் அமெரிக்க முதலீட்டாளர்களையும் சீனாவிலிருந்து விலகிச் செல்லும் பிற வணிகங்களையும் ஈர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை அமைத்துள்ளது என சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸிற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதத்தில் சீனா இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கியது.
105 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்ய சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து 80 மில்லியன் கடனைப் பெறுவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது.
இதற்கிடையில், குறைந்த வட்டி வீத கடன் அடிப்படையில் நாட்டின் சுகாதாரத் துறையை வலுப்படுத்த உலக வங்கி வழங்கிய 128 மில்லியன் டொலர் நிதியைப் பயன்படுத்தி நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்துமாறு கோரிக்கை விடுப்பதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
போதுமானளவு அவசர சிகிச்சைப் பிரிவிற்கான கட்டில்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தனிநபர் பாதுகாப்பை வழங்குமாறும் கைத்தொழில் கட்டமைப்பு உற்பத்திகளுக்கு நிதியைப் பயன்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.
கருத்துக்களேதுமில்லை