சவுத் வனராஜா தனியார் தோட்டமக்களுக்கு எந்த வித நிவாரணமும் பெற்றுக்கொடுக்க வில்லை. பொது மக்கள் விசனம்…
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்
ஹட்டன் காசல்ரி சவுத்வனராஜா தனியார் தோட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணமும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. என அத்தோட்டத்தில் வாழும் தோட்டத்தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக தொழில் இழந்த வேலையின்றி உள்ள,முதியோர் நோயாளர் கொடுப்பனவு என பல்வேறு கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இக்கொடுப்பனவுகள் ஒன்று, இரண்டு, மூன்று கட்டமென பல தடைவைகள் கொடுப்பனவுக்கு உரிமையிருந்தும் பெற்றுக்கொள்ளாத மக்களுக்காக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த மக்களுக்காக எந்த ஒரு நிறுவனமும் எந்த ஒரு அரசியல் தலைவரும் எந்த விதமான நிவாரணமும் பெற்றுக்கொடுக்கவில்லை. கொரோனா வைரஸ் தாக்குதல் கம்பனி சொந்தமான தோட்டத்தொழிலாளர்களை மாத்திரமா பாதித்தது எங்களை பாதிக்கவில்லையா?என இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
குறித்த நிவாரணம் தொடர்பாக கிராமசேவகரிடம் நாலு ஐந்து தடவைகளுக்கு மேல் சென்று இது தொடர்பாக வினவிய போதிலும் அவர் ஒரு சிலருக்கு அதிமாக தவறி வழங்கியிருப்பதாகவும் அதனை சரிபார்த்த பின் பெற்றுத்தருவதாக தங்களை அனுப்பி விடுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்டத்தில் வேலை செய்பவர்களில் அதிகமானவர்கள் நாள் கூலிக்கு வேலை செய்வதாகவும் அவர்கள் தற்போது தொழிலின்றி இருப்பதாகவும்,கடும் வரட்சி காரணமாக தொழிலாயர்கள் வேலையின்றி சம்பளம் இன்றி இருப்பதாகவும் ஒரு குடும்பத்தில் நான்கு ஐந்து பேர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும்; இதனை அறிந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் தாங்களுக்கு சாப்பிடுவதற்காக அரிசி பெற்றுக்கொடுத்ததாகவும் வேறு எவரும் எமது துன்பத்தின் போது வரவில்லை என்றும் இவர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்குகளை பெற்றுக்கொள்ள வரும் அரசியல் தலைவர்கள் இப்போது இந்த பக்கம் கூட வந்து பார்க்கவில்லை. என்றும் இம்முறை தேர்தலில் உதவியவர்களுக்கு தவிர வேறு எவருக்கும் வாக்களிக்க போவதில்லை. என்றும் இவர்கள் மேலும் தெரிவித்தனர்;.
எனவே இது குறித்த கௌரவ ஜனாதிபதி அவர்கள் எமக்கு உதவுவதற்கு முன்வர வேண்டும் எனவும் அவர்கள் இதன் போது மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை