நோர்வூட் பொலிஸ் நிலையத்தால் நோர்வூட் பொது இடங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டன…
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகரப்பகுதியில் உள்ள, பொது இடங்கள் நோர்வூட் பொலிஸாரினால் இன்று (17) காலை முதல் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.ரணவீர அவர்களின் ஆலோசனைக்கமைய இன்று (17) இந்த தொற்று நீக்கம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது நோர்வூட் விகாரை,முருகன் கோயில்,பள்ளிவாசல்,நோர்வூட் நகரம் ழுமுவதுமாக பொது இடங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை ஐந்து மணியுடன் தளர்த்தப்படவுள்ள இதனால் பொது அதிமாக பயன்படுத்தும் இடங்களாக இனங்காணப்பட்ட இடங்கள் அனைத்தும் தொற்றுநீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வுக்கு குறித்த பொலிஸ் நிலையத்தின் உத்தியோகஸ்தர்கள் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை