வவுனியாவில் வியாபார நிலையத்தில் தீ விபத்து: பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை!

வவுனியா, சிறிராமபுரத்தில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வவுனியா, காத்தார் சின்னக்குளம் வீட்டுத்திட்டம், திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்திருந்த பல்பொருள் வியாபார நிலையமே நேற்று (சனிக்கிழமை) இரவு 8 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

குறித்த வர்த்தக நிலையம் இரவு 8 மணியளவில் மூடப்பட்ட நிலையில் கடையிலிருந்து புகை வெளிக்கிளம்பியுள்ளது. அதனை அவதானித்த சிலர் தீயை அணைக்க முற்பட்டதுடன் நகரசபையின் தீயணைப்புப் பிரவினருக்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் கடை முழுவதுமாக தீப்பற்றி எரிந்ததனால் கடையினுள் இருந்த சுமார் பத்து இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் மின் ஒழுக்கினாலேயே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.