இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: உதவுமாறு கோரிக்கை!
ஊரடங்குச் சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கோயில்கள் மற்றும் மங்கள விழாக்கள் இடம்பெறாத நிலையில் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இசைக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்களின் ஊடக சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது. முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்கள் வெளியிடப்பட்டது.
குறிப்பாக, ஊரடங்குச் சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கோயில்கள் மற்றும் மங்கள விழாக்கள் தற்போது இடம்பெறாத நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில், விழாக்கள், கோயிலைச் சார்ந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமக்கான வாழ்வாதாரங்கள் இதுவரையில் உரிய முறையில் கிடைக்கவில்லை எனவும் தமது நிலைமையை கருத்திற்கொண்டு உரியவர்கள் தமக்குரிய வாழ்வாதாரத்தினை தரவேண்டும் எனவும் கலைஞர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை