இறந்தவர்களுக்கு நீதி கிட்டும் வரை தமிழரின் போராட்டங்கள் தொடரும்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் சுமந்திரன்

இந்த துன்பகரமான நாளை தமிழ் மக்கள் அனைவரும் தத்தமது வீடுகளிலேயே சுடரேற்றி நினைவுகூர வேண்டும் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து இன்றுடன் 11 வருடங்கள் ஆகின்றன.

முல்லிவாய்க்கால் முதலாம் ஆண்டு நினைவுதினம் நெருங்கும் போது நான் முதன்முறையாக நாடாளுமன்றுக்குள் நுழைந்தேன். நாடாளுமன்றில் இது குறித்து விவாதித்தேன்.

இறந்தவர்களை நினைவுகூரும் உரித்து அனைவருக்கும் உண்டு என்று கூறினேன்.

ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றம் இல்லை. ஆகவே பகிரங்கமாக அறிக்கை மூலம் மட்டும் இதை சொல்கின்றேன.

இந்த இறுதிப்போரில் மரணித்த அனைவருக்கும் எமது அஞ்சலியை தெரிவிக்கின்றேன்.

இந்த பேரவலங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற எங்களுடைய போராட்டம் தொடர்ந்தும் முன்னெக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.