சிகை அலங்கரிப்பாளர்களுக்கு தமிழரசால் உலர் உணவுப் பொதி!
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் நாடு முடங்கியமையால் தமது தொழில்களை மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரம் இழந்துள்ள புளியந்தீவு தெற்கு பிரதேசத்திலுள்ள சிகையலங்காரம் தொழில் புரியும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் கோரிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாநகரசபையின் புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் வேண்டுகோளின்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் மற்றும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் உதவியின் மூலம் பிரதேசத்தில் சிகையலங்காரம் தொழில் புரியும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மாநகரசபை உறுப்பினரின் வேண்டுகோளின் பிரகாரம் சுமார் 70 குடும்பங்களுக்கு இவ்வாறான பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை