கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மீள ஆரம்பம்!
கொரோனா வைரஸ் காரணமாக கைவிடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையம், முக்கிய 3 திட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான ஓடுதளத்தைப் புதுப்பித்தல், புதிய விமான தரிப்பிடங்களை அமைத்தல் மற்றும் புதிய பயணிகள் முனையங்களை அமைத்தல் ஆகிய திட்டங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.
விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனையத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கையை மேலும் இரண்டரை வருடங்களுக்குள் நிறைவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தவிர மேலும் இரண்டு முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 6 பில்லியன் ரூபாய் பெறுமதியான அந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ஹசாமா கோபரேஷன் எனும் நிறுவனம் பொறுப்பேற்றது.
குறித்த பணிகள் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் நிறைவடையவுள்ளன.
கருத்துக்களேதுமில்லை